நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மாற்றுக்கட்சியினர் இணையும் விவகாரத்தில் அதிமுக – பாஜக இடையே உச்சகட்ட மோதல் நிலவி வருகிறது. கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “சமூக வலைதளங்களில் வரும் தகவல்களுக்கு எல்லாம் கோபப்படக் கூடாது.
இதற்கு எல்லாம் திமுக ஐடி விங், பாஜக ஐடி விங்கை பாராட்ட வேண்டும். இல்லாததை இருப்பது போல காண்பிப்பது இவர்கள்தான். இதைப்பற்றி பேசுவது வீண். நம்மை பேச வைப்பதற்காகத்தான் என்னைப் பற்றி, தங்கமணியைப் பற்றி பதிவு செய்கிறார்கள்.
அதிமுக என்பது தாய் வீடு. அனைவரும் தாய் வீட்டுக்குத்தான் வருவார்கள் யாரும் வெளியே போக மாட்டார்கள். உலக அளவில் அதிமுக 7-வது பெரியக் கட்சி. 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இது நம் கட்சி. சாதாரண குடும்பத்தில் பிறந்த நம்மை எம்.எல்.ஏ-வாக, அமைச்சராக மாற்றி அழகு பார்த்தது இந்தக் கட்சி.
வெறும் 3 , 4 சதவிகிதம் வாக்காளர்கள் உள்ள பாஜக-வுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா... தமிழகத்தில் அதிமுகவுக்கு 35-40 சதவிகிதம் வாக்கு உள்ளது. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம்.
டோன்ட் கேர் (Don’t Care ) என விட்டுச் செல்லுங்கள். கவலைப்படாதீர்கள். நம்மைப் பற்றி தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். கோவையில் உள்ள பலர் 2 முறைக்கு மேல் எம்எல்ஏ ஆகியுள்ளனர். இதற்கு காரணமான இந்தக் கட்சியை விட்டு, வெறும் 3, 4 சதவிகித கட்சியான பாஜக-வுக்கு போவார்களா...
எதையுமே செய்யாமல் விளம்பரத்தில் தான் திமுக ஆட்சி ஓடுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் காலரை தூக்கி, நெஞ்சை நிமித்தி சென்று வாக்கு கேட்கும் தைரியம் நமக்கு மட்டும் தான் உள்ளது. மற்ற எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.” என்றார்.
from Vikatan Latest news https://ift.tt/9ZBjYWO
0 Comments