முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாளி, பலாப்பழம் மற்றும் திராட்சை ஆகிய 3 சின்னங்களில் ஒன்று கோரப்பட்டிருந்தது. முதலில் வாளி சின்னத்திற்கான தேர்வு நடந்தது. இந்நிலையில் மற்ற 5 பன்னீர்செல்வங்களும் தங்களுக்கும் வாளி சின்னங்களையே கோரினர். இதனால் சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் இழபறி நீடித்தது. இதையடுத்து வாளி சின்னத்தை தேர்வு செய்ய குலுக்கல் நடைபெற்றது. இதில் திருமங்கலம் வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு வாளி சின்னம் ஒதுக்கப்பட்டது.



திராட்சை சின்னத்திற்கு 3 பன்னீர்செல்வங்கள் மோதியதால், அதற்கும் குலுக்கல் நடந்தது. இதில் மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு திராட்சை சின்னம் ஒதுக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து பலாப்பழம் சின்னத்திற்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், மற்றொரு பன்னீர்செல்வமும் மோதினர். இதில் ஒரு வழியாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழ சின்னம் கிடைத்தது. இதனால் அவரது ஆதரவாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து தெற்குகாட்டூரைச் சேர்ந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு கண்ணாடி டம்ளர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


உசிலம்பட்டி வட்டம், மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு கரும்புவிவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.



இறுதியாக வந்த பரமக்குடி, கங்கை கொண்டான் பகுதியைச் சேர்ந்த எம்.பன்னீர்செல்வத்திற்கு பட்டாணி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சுமார் 4 மணி நேரம் நீடித்து வந்த சின்னம் ஒதுக்கீடு முடிவுக்கு வந்தது.
from Vikatan Latest news https://ift.tt/PAnZgHx
0 Comments