https://gumlet.vikatan.com/vikatan/2024-04/a7ac1273-56aa-4c66-b3b7-4d8c200e452b/ttt.JPG?w=280தென்காசி: காரில் 600 கிலோ குட்கா கடத்தல் - மாவட்ட ஊராட்சி தலைவரின் கணவர் உள்பட 2 பேர் கைது!

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதைத்தடுக்க காவல்துறையினர் பல்வேறுகட்ட முயற்சிகள் எடுத்தும், குட்கா கடத்தல் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்துவருகிறது. இந்தநிலையில் தென்காசி மாவட்டத்தில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட ஆளுங்கட்சி பிரமுகரை போலீஸ் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.

அப்போது நம்மிடம் பேசியவர்கள், 'வெளிமாநிலங்களில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீஸூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மாவட்ட எல்லையான சிவகிரியில் காவல்துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டதில் காரில் 600 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, காரில் வந்தவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர், தென்காசி மாவட்ட ஊராட்சி கவுன்சில் தலைவரான தி.மு.க.வை சேர்ந்த தமிழ்ச்செல்வியின் கணவர் போஸ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தி.மு.க. பிரமுகர் போஸ் மற்றும் கார் டிரைவர் லாசர் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட இருவரும் சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்' என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from Vikatan Latest news https://ift.tt/Nn2SCA9

Post a Comment

0 Comments