மதுரை கோரிப்பாளையத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நீர், மோர் பந்தலை தொடங்கி வைத்த செல்லூர் ராஜூ பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "52 ஆண்டுகளாக மக்களுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் கட்சி அதிமுக" என்றவர், தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். "வாக்காளர்கள் பலரின் பெயர் பட்டியலிலிருந்து உண்மையிலேயே விடுபட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கு என்று சொல்வதா? வேறு என்ன சொல்வது எனத்தெரியவில்லை. மதுரையில் மட்டுமல்ல, எல்லா மாவட்டங்களிலும் நடந்துள்ளது.

அரசியல் கட்சிகளால் தேர்தல் காலத்தில் தங்கள் கட்சியினர் மூலம் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் தடை செய்தது. தொடர்ந்து அரசு அலுவலர்கள் பணியாளர்களை கொண்டு இப்பணியை செய்தார்கள். திமுக ஆட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் அதிகம் இருந்ததால் பூத் சிலிப் வழங்கும் பணியில் அதிகம் கவனம் செலுத்தவில்லை. தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினர் மூலம் பூத் சிலிப் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பூத் சிலிப் குறித்தும், வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்தும் ஐபிஎஸ் படித்த அதிபுத்திசாலி தற்போது பேசுகிறார், ஏன் முன்னரே பேசவில்லை? குறிப்பாக பாஜக வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர் என சொன்னால் அதை ஏன் முன்பே ஆணையத்திடம் அண்ணாமலை கூறவில்லை?
தேர்தலில் தனக்கு சரியான வாக்கு பதிவாகவில்லை, தன்னை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் இதுபோன்று அண்ணாமலை பேசுகிறார். இதையெல்லாம் ஆணையத்திடம் மனுவாக ஏற்கனவே கொடுத்து இருக்கனும். ஒருவர் போனில் பேசியதை டேப் செய்து வெளியிடக்கூடிய திறமை படைத்த அண்ணாமலை, கட்சியினர் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை வாக்காளர் பட்டியலிலிருந்து பாஜக வாக்காளர்கள் விட்டுப்போயுள்ளனர் என்பதை முன்பே சொல்லியிருக்க வேண்டாமா?

தமிழகத்துக்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம். அது ராகுலா இருந்தாலும் சரி, மோடியா இருந்தாலும் சரி. ஆனால், தமிழகத்தில் பாதகமானதை செய்தால் நிச்சயம் எதிர்ப்போம். அதை எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி உள்ளார், திமுக எம்.பிக்களை போல அதிமுக எம்பிக்கள் இருக்க மாட்டார்கள்.
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. ஒரு மதத்தை குறி வைத்து உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் மோடி பேசுவது சரியல்ல,

இந்தியாவில், தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.
வெறும் வழக்கு, குண்டாஸ் போடுவது மட்டுமல்லாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் அரபு நாடுகளை போல தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
from Vikatan Latest news https://ift.tt/YwdDR92
0 Comments