https://gumlet.vikatan.com/vikatan/2022-12/2c12d81d-4e2e-4b6e-931e-dc3b76a050f1/vikatan_2021_12_41321792_73e4_46c0_af47_bdb051bf5c5f_9d2504b9_b3df_4459_9e9f_a50f3a03ab06.avif?w=280போதை ஊசி பயன்படுத்திய இளைஞர் உயிரிழப்பு - சேலத்தில் அதிர்ச்சி... போலீஸ் விசாரணை!

சேலத்தில் போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டுவரும் கும்பலைப் பிடிப்பதில், மாநகர போலீஸார் `அதி' தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சேலம் மாநகரில் வலி நிவாரணி மாத்திரையை போதைக்காக விற்பனை செய்துவந்த கும்பலை, போலீஸார் கையும் களவுமாகப் பிடித்தனர். இதில் மொத்தம் 12 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், முக்கிய குற்றவாளியான கோவையைச் சேர்ந்த செல்வராஜ் எனும் நபரையும் கைதுசெய்தனர்.

இந்த நிலையில், போதை ஊசி பயன்படுத்திய இளைஞர் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம், அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஜபருல்லா (21). பெற்றோரை இழந்த இவர், திருச்சியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்தார். சிறு சிறு தவறுகளில் சிக்கி, செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

உயிரிழப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஜபருல்லாவை அவரது நண்பர் நபித், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரைப் பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்த போலீஸாரின் விசாரணையில் ஜபருல்லாவும் நபித்தும் போதை ஊசி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று போதை ஊசியை ஜபருல்லா பயன்படுத்தி உள்ளார், இதன் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது நண்பரான நபித்தைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை ஊசி

மேலும் இதுதொடர்பாக காவல்துறை வட்டாரங்களில் பேசியபோது, “சமீபகாலமாக போதை ஊசிக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதில், போதைக்காக வலி நிவாரணி மாத்திரை விற்பனை செய்யும் ஒரு கும்பலை கையும் களவுமாகப் பிடித்தோம். இதனால் போதைக்கு அடிமையான இளைஞர்களுக்கு போதை மாத்திரை கிடைப்பது என்பது மிகவும் தட்டுப்பாடாகியுள்ளது. இதனால் போலீஸார் அடுத்தகட்டமாக இது போன்ற போதை ஊசிக்கு அடிமையான இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட விருக்கிறோம். மேலும், இத்தகைய போதை ஊசிகளை விற்பனை செய்யும் கும்பல் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/gZjYJ20

Post a Comment

0 Comments