விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மின் இணைப்பு வழங்குவதற்கு 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் உதவி செயற்பொறியாளர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சிவகாசி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் சல்வார்பட்டியில் பட்டாசு தயாரிப்பதற்கு தேவையான பிளாஸ்டிக் மூலப்பொருள் கம்பெனி நடத்தி வருகிறார். ஏற்கனவே இவருடைய தொழில் நிறுவனத்திற்கு மின்வாரியத்தின் மூலமாக மும்முனை இணைப்பு பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் தொழில் தேவைக்காக கூடுதலாக மேலுமொரு இணைப்பை பெறவேண்டிய கட்டாயம் ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே, கூடுதல் மின் இணைப்பு பெறுவதற்கு வெம்பக்கோட்டையில் செயல்பட்டு வரும் மின் பகிர்மான கழகத்தில், கடந்த பிப்ரவரி மாதம் ரவிச்சந்திரன் மனு அளித்திருக்கிறார். இந்த மனுவினை பரிசீலனை செய்த வெம்பக்கோட்டை மின் உதவி செயற்பொறியாளர் சேதுராமன், மின் இணைப்பு வழங்குவதற்கு 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டிருக்கிறார். ஆனால் தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என ரவிச்சந்திரன் கூறியதற்கு, 10 ஆயிரம் ரூபாயாவது தந்தால் மட்டுமே மின் இணைப்பு தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி பொறியாளர் சேதுராமன் கூறியிருக்கிறார்.
இந்தநிலையில் லஞ்சம் தர விருப்பம் இல்லாத ரவிச்சந்திரன், உதவி மின் பொறியாளர் சேதுராமன் லஞ்சம் கேட்டது குறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், ரசாயனப்பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை சேதுராமனிடம் தரும்படி ஆலோசனை கூறி அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து நேற்று மாலை, வெம்பக்கோட்டை மின்வாரிய அலுவலகத்துக்கு வந்த ரவிச்சந்திரன், ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை உதவி மின் பொறியாளர் சேதுராமனிடம் லஞ்சமாக தந்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி.ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் பூமிநாதன், சால்வன்துரை தலைமையிலான போலீஸார், உதவி மின் பொறியாளரை கையும் களவுமாக பிடித்த கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from Vikatan Latest news https://ift.tt/gYmL758
0 Comments