பார்டர்- கவாஸ்கர் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் விளையாட இருக்கிறது.
5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் இன்று, அதாவது நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடைசி போட்டி ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் , சர்ஃபராஸ் கான், விராட் கோலி, பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட் , கே எல் ராகுல், ஹர்ஷித் ராணா, அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பார்டர்- கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்
பேட் கம்மின்ஸ் , ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷேன், நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருக்கின்றனர்.
கேப்டன்கள்
ரோஹித் சர்மா இந்தத் தொடரில் இந்திய அணியை வழிநடத்துகிறார். ஆனால் ரோஹித்திற்கு குழந்தை பிறந்திருப்பதால் முதல் போட்டியில் மட்டும் அவர் பங்கேற்க மாட்டார். அவருக்கு பதில் முதல் போட்டியில் பும்ரா இந்திய அணியை வழிநடத்துகிறார். ஆஸ்திரேலிய அணியை பேட் கம்மின்ஸ் வழிநடத்துகிறார்.
இந்திய அணிக்கு இருக்கும் சவால்:
இந்திய அணி சுமார் 2 மாத காலம் ஆஸ்திரேலியாவில் தங்கி இருக்கும். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி குறைந்தது 4 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை டிரா செய்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க முடியும். ஒரு வேளை தொடரை இழந்தாலோ மிக குறைந்த போட்டிகளில் வெற்றி பெற்றாலோ இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும்.
எதில் பார்க்கலாம்?
2024 - 2025 ஆம் ஆண்டிற்கான பார்டர்- கவாஸ்கர் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சி சேனல்களில் நேரலையில் பார்க்கலாம். அதேபோல டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டிகளை பார்க்கலாம்.
கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த 2 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி வென்றிருப்பதால் இந்த தொடர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MaperumSabaithanil
from Vikatan Latest news https://ift.tt/qJIeF5f
0 Comments