https://ift.tt/NOuvTsU Boss Tamil 8: ரீ என்ட்ரி ஆன முன்னாள் போட்டியாளர்.. வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!

விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 கிட்டத்தட்ட பாதி நாட்களைத் தொட்டு விட்டது.

ரவீந்தர், ரஞ்சித், அர்னவ், தர்ஷா குப்தா, பவித்ரா ஜனனி, சாச்சனா, சுனிதா என  சினிமா, சின்னத்திரை, மாடலிங் ஏரியாக்களிலிருந்து பதினெட்டுப் பிரபலங்கள் போட்டியாளர்களாகக் களம் இறங்கினார்கள். தொடங்கிய மறுநாளே சாச்சானா வெளியேறி, மீண்டும் அடுத்த வாரமே அவர் நிகழ்ச்சிக்குள் சென்றதையும் பிக்பாஸ் நிகழ்த்திய கண்ணாமூச்சி விளையாட்டு என்றார்கள்.

தொடர்ந்து அடுத்தடுத்த எவிக்‌ஷன் நிகழ்ந்து இதுவரையிலும் தர்ஷா குப்தா, ரவீந்தர், சுனிதா, அர்னவ் உள்ளிட்ட சிலர் எலிமினேட் ஆகி வெளியேறியள்ளனர்.

இதற்கிடையில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் மஞ்சரி, ராயன், ரானவ், வர்ஷினி வெங்கட் உள்ளிட்ட ஆறு பேர் சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சிக்குள் சென்றனர்

வர்ஷினி

இந்நிலையில் அடுத்த வைல்டு கார்டு எண்ட்ரி நிகழ்ந்து அதன் மூலம் அர்னவ் மறுபடியும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பிருப்பதாகக்  கூறப்பட்டது. அர்னவிடம் நாம் இது தொடர்பாகப் பேசிய போது அதற்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்லியிருந்தார், இது தொடர்பாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

அந்த வைல்டு கார்டு எண்ட்ரியுமே இந்த வாரத்தில் அதாவது நேற்று நடந்த எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங்கின் போது நிகழ்ந்திருப்பதாக நம்பகமான சோர்ஸ்கள் தெரிவிக்கின்றன.

இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் நேற்று காலையில் தொடங்கி பிக்பாஸ் செட்டில் இரவு வரை நீண்டது.

இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் வர்ஷினி, முத்துக்குமரன், ராயான், ஜாக்குலின் உள்ளிட்டோர் இருந்த நிலையில் ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஓட்டுகளின் அடிப்படையில் வர்ஷினி வெங்கட் வெளியேறிருப்பதாகத் தெரிகிறது.

வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்கு வந்த வர்ஷினி வந்த வேகத்திலேயே வெளியேறிய மற்றும் அர்னவின் ரீ எண்ட்ரி எபிசோடுகள் இன்று ஒளிபரப்பாகவிருக்கிறது.   



from Vikatan Latest news https://ift.tt/WSRqJPM

Post a Comment

0 Comments