அஜித் நடிப்பில் உருவாகி வருகிற திரைப்படம் 'விடாமுயற்சி'.
மகிழ் திருமேனி இயக்கத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, நிகில் நாயர் உட்பட நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். முன் அறிவிப்பு எதுவுமின்றி இப்படத்தின் டீஸரை வெளியிட்டிருக்கிறது படக்குழு.
அஜர்பைஜான் பகுதியில் படத்தின் முழு கதையும் நகர்கிறது. அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் அஜித் வசனம் ஏதுமின்றி டீசரை கட் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். டீசரை வெளியிட்டு படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
அஜித் நடிப்பில் உருவாகி வருகிற 'குட் பேட் அக்லி' திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாவதாக முன்பு அறிவித்திருந்தனர். ஆனால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்பதை தயாரிப்பாளர் 'மைத்ரி மூவி மேக்கரஸ்' நவீன் சூசகமாக சொல்லியிருந்தார். விடாமுயற்சி அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாவதால் 'குட் பேட் அக்லி' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் எனக் கூறுகிறார்கள்.
from Vikatan Latest news https://ift.tt/VThpvK0
0 Comments