https://gumlet.vikatan.com/vikatan/2024-12-11/g0uya8j9/vikatan_2019_08_66f3be70_071c_464d_9bff_03f622a0fc25_police_crime_scene.jpg?w=280கண்களில் ஃபெவிகால், உடலில் தின்னர்; தட்டிக்கேட்ட கணவனை உயிரோடு கொளுத்திய மனைவி! - ஊட்டி `திடுக்!'

நீலகிரி மாவட்டம், பந்தலூர் ஹட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் முரளி (37) - விமலாராணி (28) தம்பதி. இவர்களுக்கு 8, 5, 2 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் முரளி அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்திருக்கிறார். நேற்று முன்தினம் காலை முரளியின் வீட்டில் பயங்கர அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. இதைக் கேட்டுப் பதறிய அக்கம் பக்கத்தினர் முரளியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், துடிதுடித்து கதறியிருக்கிறார் முரளி. தீயை அணைத்து முதலுதவி அளித்த மக்கள், ஆம்புலன்ஸ் வரவழைத்து பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முரளி

கடுமையான தீக்காயத்தை கண்ட மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முரளிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருமணம் தாண்டிய உறவில் இருந்த மனைவி விமலா ராணியை தட்டிக்கேட்ட காரணத்தால் தன்‌மீது தீ வைத்து கொடூரமாக எரித்ததாக மரண வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் விமலா ராணியைக் கைதுசெய்து விசாரணை நடத்தியுள்ளனர். கணவனைக் கொலைசெய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட விமலாராணி மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவரைச் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்தக் கொடூரம் குறித்து தெரிவித்த காவல்துறையினர், "ஆண் நண்பர்களுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசுவதையே வழக்கமாக செய்து வந்திருக்கிறார் விமலாராணி. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு வெளியே நின்று நீண்ட நேரமாக போனில் பேசிய மனைவியை முரளி கண்டிக்க, வாக்குவாதம் முற்றியிருக்கிறது.

விமலா ராணி

மறுநாள் காலை முரளியின் கண்களில் ஃபெவிகால் தடவியதுடன், பெயின்ட்டிங் பணிகளுக்காக வீட்டில் வைத்திருந்த தின்னர் திரவத்தை உடலில் ஊற்றி பற்ற வைத்திருக்கிறார். கடுமையான தீக்காயத்தால் முரளி உயிரிழந்துள்ளார். கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளோம்.

ஆதரவின்றி பரிதவிக்கும் மூன்று பெண் குழந்தைகளின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது" என்றனர்.



from Vikatan Latest news https://ift.tt/BOds1YE

Post a Comment

0 Comments