https://ift.tt/k9Uh0HS Musk: ``ட்ரம்ப்பின் சட்டம் ஏமாற்றமளிக்கிறது'' - முக்கிய மசோதாவில் முரண்படும் மஸ்க்!

அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ள "Big Beautyful Bill" ஏமாற்றம் அளிப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பிக் பியூடிஃபுல் பில் பல்வேறு பொருளாதார செலவினங்களை மாற்றியமைக்கும் சட்ட மசோதாவாகும். இதற்கு ஆதரவை திரட்டுவதற்காக நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார் ட்ரம்ப். ஆனால் இதில் பல ட்ரில்லியன் டாலர்கள் வரிச்சலுகை இருப்பதானால், இது பட்ஜட் பற்றாக்குறையை அதிகரிக்கும் என்கிறார் எலான் மஸ்க்.

இந்த மசோதாவில் உள்ள சட்டங்கள் அமெரிக்காவிலிருந்து பணம் அனுப்பும் இந்தியர்களைப் பாதிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trump

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றிக்காக பெரும் பணமும் நேரமும் செலவழித்தார். வெற்றிபெற்ற பிறகு அரசு செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் அரசு செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக செயல்பட்டார்.

எலான் மஸ்கின் செயல்பாடுகளுக்கு அரசுக்குள்ளேயே மாற்றுக்கருத்துகள், விமர்சனங்கள் எழுந்ததால், அவரது அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. சமீபத்தில் அரசு பொறுப்பில் இருந்து முழுமையாக விலகி, முழுவதுமாக நிறுவனங்களை கவனித்து வருவதாகத் தெரிவித்திருந்தார் மஸ்க்.

என்ன கூறினார் Elon Musk?

பிக் பியூடிஃபுல் பில் குறித்து, "இந்த மசோதாவால் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் இது பட்ஜெட் பற்றாக்குறையை அதிகரிப்பதுடன் DOGE குழுவின் பணிகளை குறைமதிப்பீட்டுக்கு உள்ளாக்குகிறது." எனக் கூறியுள்ளார் எலான் மஸ்க்.

DOGE Head Elon Musk

அதிபர் ட்ரம்ப்புக்கு நெருக்கமான நபராக அறியப்படும் எலான் மஸ்க், இந்த விவகாரத்தில் மாற்றுக்கருத்தை வெளியிட்டிருப்பது அமெரிக்க அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

எலான் மஸ்க் மட்டுமல்லாமல், நாடு திவாலாகும் நிலையை நோக்கிச் செல்கிறது எனக் கூறும் குடியரசுக் கட்சியின் பொருளாதார வல்லுநர்களும் இந்த மசோதா மீது சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இந்த சட்டம் 10 ஆண்டுகளில் நாட்டின் பற்றாக்குறையை 4 ட்ரில்லியன் டாலர்களாக உயர்த்தும் என அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனினும் வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர்கள் கவுன்சில், இந்த தொகுப்பு 5.2 சதவிகிதம் வரை வளர்ச்சியைத் தரும் என கணிக்கின்றனர்.

கடந்த வாரம் பிரதிநிதிகள் சபையால் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் மேல் சபைக்கு (செனட்) செல்லவிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Vikatan Latest news https://ift.tt/h7siQ0f

Post a Comment

0 Comments