https://ift.tt/v7z3G9X : 'ஒரு மேட்ச்ல 3 கேட்ச் விட்டா இப்படித்தான்...' - குஜராத் கேப்டன் கில் அதிருப்தி

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான எலிமினேட்டர் போட்டி நடந்திருந்தது. இந்தப் போட்டியை மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டிக்கு சென்றிருக்கிறது. இந்நிலையில், தோல்விக்குப் பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் கில் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.

Gujarat Titans
Gujarat Titans

கில் பேசியதாவது, 'இது ஒரு அற்புதமான போட்டி. நாங்கள் சரியான வேகத்தில்தான் சேஸ் செய்து கொண்டிருந்தோம். கடைசி 3-4 ஓவர்களில்தான் நாங்கள் சரியாக ஆடவில்லை. ஆனாலும் இது ஒரு நல்ல போட்டிதான். ஒரு போட்டியில் 3 எளிய கேட்ச்களை ட்ராப் செய்யும்போது அந்தப் போட்டியை வெல்வது ரொம்பவே கடினம். மேலும் அது பௌலர்களுக்கும் சிரமத்தைக் கொடுத்துவிடுகிறது.

அவர்களாலும் பேட்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் செய்துவிடுகிறது. உங்களின் ஆட்டத்தை ஆடுங்கள் என்றுதான் சாய் சுதர்சனுக்கும் வாஷிக்கும் சொல்லியிருந்தோம். காற்றில் ஈரப்பதம் இருந்ததால் எங்களுக்கு பேட்டிங் கொஞ்சம் எளிமையாக இருந்தது.

Gujarat Titans
Gujarat Titans

இந்தப் பிட்ச்சில் 210 ரன்களுக்குள் அவர்களை சுருட்டியிருந்தால் எங்களால் வென்றிருக்க முடியும். இந்த சீசனில் எங்களுக்கு நிறைய பாசிட்டிவ்வான விஷயங்களும் நடந்திருந்தது. குறிப்பாக, சாய் சுதர்சன் அசாதாரணமாக ஆடியிருக்கிறார்.' என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/uoriaeR

Post a Comment

0 Comments