https://ift.tt/xhmFnwR Sharma : 'வெறும் 4 அரைசதம்தாங்க அடிச்சிருக்கேன்...' - ஆட்டநாயகன் ரோஹித் சர்மா

'மும்பை வெற்றி!'

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான எலிமினேட்டர் போட்டி நடந்திருந்தது. இந்தப் போட்டியை மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டிக்கு சென்றிருக்கிறது. மும்பை சார்பில் 81 ரன்களை எடுத்திருந்த ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விருதை வாங்கிவிட்டு சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

'ரோஹித் பேசியவை...'

ரோஹித் பேசியதாவது, ''நான் இந்த சீசனில் நான்கு அரைசதங்களைத்தான் அடித்திருக்கிறேன். நான் இன்னும் சில அரைசதங்களை அடித்திருக்க வேண்டும். ஒரு அணியாக எங்களுக்கு இது நல்ல நாள். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டதில் பெருமைக் கொள்கிறேன். நான் ஒரு போட்டியில் ஆட இறங்கும் போது அணிக்காக எவ்வளவு அதிகமாக பங்களிப்பு செய்ய முடியும் என்பதை பற்றி மட்டும்தான் யோசிப்பேன்.

இன்றைக்கு ஆடியதை போன்ற சில ஷாட்களை முந்தைய போட்டிகளிலேயே ஆடியிருக்கிறேன். ஆனால், அதெல்லாம் கேட்ச் ஆகியிருக்கிறது. இந்தப் போட்டியில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டேன். என்னதான் அதிர்ஷ்டம் இருந்தாலும் அந்தத் தருணத்துக்குப் பிறகு முறையான ஷாட்களை ஆடித்தான் ஆக வேண்டும்.

Mumbai Indians
Mumbai Indians

பௌலிங்கின் போது ஈரப்பதத்தால் நிறைய சிரமங்கள் இருந்தது. ஆனாலும் எங்களின் பௌலர்கள் கட்டுக்கோப்பாக வீசியதில் மகிழ்ச்சி. பேர்ஸ்ட்டோவை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். அவரின் அனுபவமும் திறுனும் என்னவென்பதை நாங்கள் அறிவோம். அவர் இந்த சீசனில் முதல் போட்டியில் ஆடுவதே போன்றே இல்லை. அந்தளவுக்கு சிறப்பாக ஆடியிருந்தார்.' என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/xzbecWZ

Post a Comment

0 Comments