https://ift.tt/eK3ziQC Mithreshiva: "அமெரிக்கா காரனிடம் இதை கற்றுக்கொள்ள வேண்டும்" - ’நேச்சுரல்ஸ்’ குமரவேல் பேச்சு!

ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள பணவாசம், கருவிலிருந்து குருவரை, உனக்குள் ஒரு ரகசியம் ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் நடைபெற்றது.

நூல் வெளியீட்டு விழா
நூல் வெளியீட்டு விழா

இந்த நிகழ்வில் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் குமரவேல், "நேச்சுரல்ஸ் மூலம் சமூகத்தில் டாபுவாக இருந்த சலூன் தொழிலை ஆர்கனைஸ் செய்தேன். இதனால் தொழிலாளர்கள் பார்பர் என அழைக்கப்படுவது மாறி ஹேர் ட்ரெஸ்ஸர், ஹேர் ஸ்டைலிஸ்டாகப் பார்க்கப்படுகின்றனர். இந்த தொழில் மீதான சமூகத்தின் பார்வையை மாற்றியிருக்கிறேன். இது இல்லையென்றால் எனக்கு எந்த அடையாளமும் கிடையாது.

இந்த புத்தகங்களை வாசிப்பது, எழுத்தாளருடன் உரையாடுவதைப் போல இருந்தது.

நாம் ஏன் ஸ்டார்பக்ஸில் போய் 500 ரூபாய்க்கு காபி குடிக்கிறோம். அன்ன பூர்ணாவிலும், சரவண பவனிலும் நல்ல காபி கிடைக்கிறதே... அமெரிக்கா காரன்தான் நமக்கு காபி போட கற்றுக்கொடுக்கணுமா?

அவன் காபி போடுவதை சிஸ்டம்ஸ் அண்ட் ப்ராஸஸாகப் பார்க்கிறான். நாம் சிதம்பர ரகசியமாகப் பார்க்கிறோம். நம்மிடம் அவனை விட நல்ல ப்ராடக்ட் இருக்கிறது, அவனிடம் நல்ல சிஸ்டம்ஸ் அண்ட் ப்ராஸஸ் இருக்கிறது. இதை அவனிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

குரு மித்ரேஷிவா
குரு மித்ரேஷிவா

இவர் புத்தகத்தில் மகிழ்ச்சிதான் வெற்றிக்கு வழி என்று அழகாகப் பேசியிருக்கிறார். வேகமாக ஒரு மணி நேரத்தில் படித்து முடித்துவிடக் கூடிய புத்தகம்தான்." எனப் பேசினார்.

Guru Mithreshiva நிகழ்ச்சி

விகடன் பிரசுரம் வெளியீடுகளான இந்தப் புத்தகங்களைப் பொருளாதார நிபுணர் நாகப்பன் , எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் வெளியிட சி.கே .குமரவேல், ஜோதிடர் கே.பி . வித்யாதரன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் பெற்றுகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.



from Vikatan Latest news https://ift.tt/ft8vXIF

Post a Comment

0 Comments