https://ift.tt/fiLavXD 100: "பிரதீப்புக்காக ஒரு நாள் நேரு ஸ்டேடியம் ஃபுல் ஆகும்!" - அஸ்வத் மாரிமுத்து

அஸ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் 'டிராகன்'.

ஹீரோவாகத் தொடர்ந்து ஹிட் வரிசைகளை அடுக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.

Dragon
Dragon

டிராகன் படத்தில் பிரதீப்புடன் கயாடு லோஹர், அனுபாமா பரமேஷ்வரன், மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது.

அஸ்வத் மாரிமுத்து பேசும்போது, "நானும் பிரதீப் ரங்கநாதனும் மடிப்பாக்கம், குரோம்பேட்டைப் பகுதிகளில் முன்பு சுற்றியிருப்போம். அப்போது நான் ஹீரோவாகப் போகிறேன்னு பிரதீப் சொன்னான்.

அப்போதே 'டிராகன்' படத்தின் கதையை நாங்கள் பேசியிருக்கிறோம். இந்த நாள் வரும்னு நாங்கள் அப்போது நினைத்திருக்கிறோம். அதற்காக நாங்கள் உழைக்கவும் செய்திருக்கிறோம். அதுதான் இந்த மேடை.

இன்று படத்தின் அத்தனை கலைஞர்களுக்கும் விருது கிடைத்திருக்கிறது. எங்களுடைய ஆஃபீஸ் பாய் வரைக்கும் விருது கிடைத்ததில் ரொம்பவே சந்தோஷம். 'லவ் டுடே' படத்தைவிட டிராகன் படத்துக்கு அவனுக்கு ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.

அதைப் பார்க்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படி பிரதீப்புக்காக ஒரு நாள் நேரு ஸ்டேடியம் ஃபுல் ஆகும். அந்த நாளை நான் நண்பனாகப் பார்க்க வேண்டும்," என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR



from Vikatan Latest news https://ift.tt/03kJOpB

Post a Comment

0 Comments