வாக்கிங் போலவே ஜாகிங்கும் உடல் ஃபிட்னஸுக்கும் உடல் எடையை மெயின்டெய்ன் செய்வதற்கும் ஏற்றதுதான். உடல் ஒத்துழைப்பவர்கள் ஜாகிங் செய்யலாம். இரத்த அழுத்தம்போன்ற வாழ்வியல் பிரச்னைகள் இருப்பவர்கள், மருத்துவரை ஆலோசித்துவிட்டு ஜாகிங் செய்யலாம்.
1. சந்தோஷம் தருகிறது

தினமும் ஜாகிங் செய்கிறவர்களின் மூளை, மகிழ்ச்சியான மனநிலைக்குக் காரணமான ரசாயனங்களை அதிகம் சுரக்கிறது.
2. சர்க்கரை நோய் ஆபத்துகளைக் குறைக்கிறது

ஏற்கெனவே சர்க்கரை நோய் இருப்பவர்களுக்குச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவர உதவுகிறது. சர்க்கரை நோய் தாக்கலாம் என்கிற விளிம்புநிலையில் இருப்பவர்களுக்கு அந்தப் பாதிப்பைக் குறைக்கிறது.
3. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

ஜாகிங் செய்வதால் பாக்டீரியா தொற்றுக்குக் காரணமான செல்கள் தூண்டப்படுகின்றன. தொற்றுநோய்களுக்குக் காரணமான லிம்ஃபோசைட்ஸும் தூண்டப்படுவதால் உடலின் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது.
4. எலும்புகளின் அடர்த்தி மேம்படுகிறது

ஜாகிங் செய்யும்போது உடல் வெளியிடுகிற அத்தியாவசியமான மினரல்கள், எலும்புகளின் அடர்த்திக்கும் ஆரோக்கியத்துக்கும் காரணமாகின்றன.
5. சரியான உடல் எடையைத் தக்க வைக்க உதவுகிறது

ஒருமணி நேர ஜாகிங் பயிற்சியில் 705 முதல் 865 கலோரிகள் வரை எரிக்கப்படுவதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கிறது.
6. இதயமும் நுரையீரலும் பலம் பெறுகின்றன

ஜாகிங் செய்கிறபோது இதயத் தமனிகளின் விரிந்து சுருங்கும் தன்மை மேம்படுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது. ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கிறது. சுவாசக் கோளாறுகள் தவிர்க்கப்படுகின்றன.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
from Vikatan Latest news https://ift.tt/kWi63EZ
0 Comments