https://ift.tt/yUnevfw News : பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட் டு முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் | ஜூலை 27 ரவுண்ட்அப்

இன்றைய நாளின் (ஜூலை 27) முக்கியச் செய்திகள்!

  • பீகாரில் ஊர்க்காவல் படை தேர்வில் கலந்துக்கொண்டப் பெண் ஒருவர் மயங்கிய நிலையில், அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • இபிஎஸ் உடன் இணைவது குறித்து காலம் பதில் சொல்லாது, உரிய நேரத்தில் நான் பதில் சொல்வேன், ஆறு மாதத்திற்கு பின் எல்லாம் இறுதியான பிறகு தெரியவரும் என அமுமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

உத்தரகாண்ட் கூட்ட நெரிசல்
உத்தரகாண்ட் கூட்ட நெரிசல்
  • உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பது திமுகவின் அரசியல் ஸ்டண்ட், மக்களுக்கு கொடுக்கும் அல்வா என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்.

  • இன்று அதிகாலையில் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  • சீனாவில் 1600 -க்கும் மேற்பட்ட ஆண்களிடம் பெண்ணைப் போல நடித்து பாலியல் உறவுக்கொண்ட வீடியோவை சமூக வலைதளங்களில் விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

  • ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்ட நிலையில், எம்.பி பிரியங்கா சதுர்வேதி 'ரத்தத்தில் லாபம் பார்க்க நினைக்கிறீர்கள் நீங்கள்' என பிசிசிஐ –யை விமர்சித்திருக்கிறார்.

  • விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்பட டிரைலர் வெளியான நிலையில், நடிகை ரஷ்மிகா மந்தனா வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி
  • நீதிபதி ஜி ஆர்.சுவாமிநாதனை பற்றிய ஒரு புகார் மனுவிற்கான வழக்கில் அவரே அமர்வு நீதிபதியாக இருப்பதை எவ்வாறு அனுமதிப்பது? என மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

  • உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் இருக்கும் மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பேர் பலி.

  • கங்கை கொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.

  • அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Vikatan Latest news https://ift.tt/ZFEqCoH

Post a Comment

0 Comments