https://gumlet.vikatan.com/vikatan/2025-08-30/bc3jal5y/GxUaJozaIAQ1acS.jpg?w=280``இந்த அளவுக்கு நான் வர்றதுக்கு காரணம் அவர்தான்'' - மறைந்த S.N சக்திவேல் குறித்து M.S பாஸ்கர்

'சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரின் இயக்குநர் S.N சக்திவேல் மறைவுக்கு, நாதழுதழுக்க நடிகர் M.S பாஸ்கர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "எஸ்.என் சக்திவேல் சார் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய நண்பர்.

என்னுடைய வெல்விஷர். பட்டாவி என்ற கதாபாத்திரம் மூலமாக தமிழக மக்களிடையே எனக்கு பெயர் கிடைத்து இந்த அளவிற்கு நான் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு ராடார் நிறுவனமும், சக்திவேல் சாரும்தான் காரணம்.

S.N சக்திவேல்
S.N சக்திவேல்

அவர் இன்று விடியற்காலை இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதை கேள்விபட்டவுடன் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

நல்ல மனிதர். போராட்டம், போராட்டம் என்று வாழ்க்கையில் இருந்தவர். அந்தப் போராட்டத்தின் வழி இறைவனடி சேர்ந்துவிட்டார். மிகவும் கடினமாக இருக்கிறது.

சில மரணங்களை நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவரின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாறட்டும் என்றுதான் வேண்டிக்கொள்ள முடியும்" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR



from Vikatan Latest news https://ift.tt/DzFw2VO

Post a Comment

0 Comments