தென்சென்னையில் நடைபெற்ற சக்தி மசாலா வழங்கும் 'அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்' சீசன் 3 நிறைவு பெற்றது.சென்னை மற்றும் அதன் சற்று வட்டாரத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தங்கள் உணவுகளை க்காட்சிப்படுத்தினர். தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதள பிரபலம் செஃப் தீனா நடுவராகப் பங்கேற்றார்.
போட்டியாளர்கள் முதல் சுற்றில் காட்சிப்படுத்திய உணவுகளை அதன் செயல்முறை, காட்சிப்படுத்தும் விதம், உணவின் சுவை, அதன் ஆரோக்கிய பயன்கள், பதம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்று மோகனா, ரேவதி, ஶ்ரீ தேவி, சுபாஷிணி ஹரிநாராயணன், சுமதி கோபால், இளவேனி, சாந்தி, சகாயராணி, சாந்தினி, புவனேஸ்வரி ஆகிய பத்து பேரும் அடுத்த சுற்றான நேரடி சமையல் சுற்றுக்கு தேர்வாகினர்.
'மற்ற மாவட்டங்களை விட சென்னையில் சிறந்த உணவுகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர் எனவும் அவற்றிலிருந்து 10 பேரை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருந்தது' என்றும் தெரிவித்தார் செஃப் தீனா.
நேரடி சமையல் போட்டியில் ஒரு மணி நேரத்தில் ஒரு மெயின் டிஷ், ஒரு ஸ்டார்ட்டர், ஓர் இனிப்பு என மூன்று உணவுகளை சமைக்க வேண்டும்.பரபப்பாக நடைபெற்ற இரண்டாம் சுற்றில், போட்டியாளர்கள் சமைத்த உணவின் அதன் சுவை, பதம், காட்சிப்படுத்திய விதம் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சிக்கன் பிரியாணி, சிக்கன் மிளகு தொக்கு, ஜீரா ஆகியவை சமைத்த சகாயராணி, பனீர் டோக்லா செய்த மோகனா ஜெகதீசன், பாலக் பூரி, வெள்ளை குருமா, சிறுபருப்பு பாயாசம் ஆகியவற்றை சமைத்த ரேவதி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் மார்ச் 29-ம் தேதி சென்னையில் நடைபெறும் மாபெரும் இறுதிச் சுற்றில் பங்கேற்பார்கள். வடசென்னைக்கான போட்டி இன்று (மே 22, ஞாயிற்றுக்கிழமை) சென்னை கொளத்தூரில் நடைபெறும்.
from Vikatan Latest news https://ift.tt/8S4wPla
0 Comments