https://gumlet.vikatan.com/vikatan/2026-03-20/gr50ml7o/images20241213HElarge.webp?w=280"அமெரிக்க எங்களிடம் அனுமதி கோரியது, ஆனால் நாங்கள்.!"- அநுர குமார திசாநாயக்க சொல்வது என்ன?

ஈரான் போரில் ஈடுபட்டிருந்த விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கான கோரிக்கையை நிராகரித்ததாக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடர்ந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தி கொண்டே இருக்கிறது.

அதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் வளைகுடா நாடுகளில் தாக்குதலை நடத்தி வருகிறது.

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்
இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்

போர்ப் பதற்​றம் காரணமாக, ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் விநியோகம் கடுமை​யாக பாதிக்கப்பட்டிருக்கிறது.​

சில நாடுகள் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தான் ஈரான் போரில் ஈடுபட்டிருந்த விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கான கோரிக்கையை நிராகரித்ததாக இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.

மார்ச் 4 ஆம் தேதி 8 கப்பல்கள் மற்றும் இரண்டு போர் விமானங்களை இலங்கையில் அனுமதிக்கக்கோரி அமெரிக்கா கேட்டது.

 ட்ரம்ப்
ட்ரம்ப்

ஆனால் அந்தக் கோரிக்கையை நாங்கள் நிராகரித்துவிட்டோம். எந்த அழுத்தமும் வந்தாலும், நம் நாடு நடுநிலை வகிக்கும்" என்று பேசியிருக்கிறார்.



from Vikatan Latest news https://ift.tt/XHeCT4a

Post a Comment

0 Comments